தொடர்புடைய செய்திகள்
- மாநாடு 100 ஆவது நாள்… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!
- ஐபிஎல் போல் ஏலம் விடப்படும் ஆசிரியர் பணியிடங்கள்: அதிர்ச்சி தகவல்!
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 5000வது போட்டி: எந்தெந்த அணிகளுக்கு தெரியுமா?
- நடுரோட்டில் காதல் தம்பதி கதறல்…
- விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்: குவியும் வாழ்த்துக்கள்!
கும்பகோணம் நகராட்சிக்கு மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்!
கும்பகோணம் நகராட்சி மேயர்ப் பொறுப்புக்கு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து கும்பகோணம் பகுதியின் மேயராக காங்கிரஸ் கட்சியால் சரவணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரான சரவணன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார
