தொடர்புடைய செய்திகள்
- லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருக்கு... ட்விட் போட்டு திணறடிக்கும் குஷ்பு!
- காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு விலகுவது ஏன்? பரபரப்பு தகவல்!
- பாஜகவில் இணைகிறாரா? சென்னை விமான நிலையத்தில் குஷ்பு அளித்த பதில்!
- பாஜகவில் இணையவுள்ளார் நடிகை குஷ்பு? உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்!
- எடப்பாடியாரை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கூட்டணி! – பாஜகவுக்கு சீக்ரெட் வார்னிங்!?
காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பூவின் பதவி பறிப்பு
கடந்த சில மாதங்களாக நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக வதந்திகள் வெளி வந்து கொண்டே இருந்தன இந்த வதந்திகளை அவ்வப்போது தனது டுவிட்டர் தளத்திலும், பேட்டியிலும் குஷ்பு மறுத்து வந்தார் என்பதும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது மறுப்பை அழுத்தமாக பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள குஷ்பு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடியாக குஷ்பு மீது நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்து குஷ்பு அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளதாக தெரியவருகிறது
அடுத்த கட்டுரையில்
