1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. conductor drive bus passengers shocked

மதுபோதையில் ஓட்டுனர், நடத்துனர் பேருந்தை ஓட்டியதால் பரபரப்பு!

bus
ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருவண்ணாமலையில் இருந்து நேற்று திருப்பதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பல இடங்களில் தாறுமாறாக ஓடியதைப் பார்த்து அதில் பயணம் செய்த 46 பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனையடுத்து ஒரு சில பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் சென்று பார்த்தபோது நடத்தினர் பேருந்தை ஓட்டி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.மேலும்அருகில் உள்ள இருக்கையில் மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் மாற்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொண்டு அந்த பேருந்து திருப்பதிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
அதிமுகவின் பிரிவினைக்கு ஓபிஎஸ் தான் காரணம்: கடம்பூர் ராஜு பேட்டி