1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (18:09 IST)

சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் மெட்ரோ ரயில்: ஒப்பந்தம் கையெழுத்து

metro
சென்னையில் ஓட்டுநரை இல்லாமல் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூபாய் 946.92 கோடிக்கு கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
 
இந்த ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரன்ஸ்போட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 946.92 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான கால அளவு 40 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் ஓட்டுனர் இல்லாமல் மூன்று பெட்டிகளை கொண்ட மெட்ரோ ரயில் விரைவில் இயங்கும் என்பது சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.