1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (15:30 IST)

11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

Senthil Balaji
தமிழகத்தில், 11,88, 043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24x7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன.

இந்த நிலையில்,மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டுவிட்டர் பக்கத்தில்,'' 11,88,043 புகார்களில் 99%
புகார்களுக்கு தீர்வுகள்
காணப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் தளபதி @mkstalin
அவர்களின் ஆணைக்கிணங்க,
24x7 செயல்படும் மின்னகம் - மின்
நுகர்வோர் சேவை மையத்தின்
செயற்பாடுகள் குறித்து இன்று
அதிகாரிகளுடன் ஆய்வு
மேற்கொண்ட போது.. ''எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj