வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Anandakumar
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2022 (22:10 IST)

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறி அழுத பெண்!

senthilbalaji
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உழைத்த எனது கணவரை இதுவரை பார்க்கவில்லை, எந்த ஒரு கட்சிக்காரரும் பார்க்கவில்லை, மாவட்ட ஆட்சியர் மிரட்டலுக்கு பயந்து உடலை பெற்றுக்கொள்கிறேன் கண்ணீர் விட்டு கதறிய  ஜெகநாதனின் மனைவி

கரூர் கல்குவாரி வாகனம் ஏற்றி கொலை செய்த ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில்,உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் வருவதற்கு முன்பு,

கரூர் அரசு மருத்துவமனை சவக்கடங்கு அருகே இருந்த ஜெகநாதன் அவரது  மனைவி ரேவதி, எங்கள் இருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது, கவர்மெண்ட்  உள்ளதா என்று தெரியவில்லை,கட்சிக்காரர்கள் இதுவரை யாரு வந்து பார்க்கவில்லை, திமுக கட்சி என்று பல லட்சம் செலவு செய்து உள்ளார், அமைச்சர் செந்தில் பாலாஜி எனது உயிர் என்று பாடுபட்டார்-இதுவரை வந்து இறந்த என் கணவரின் உடலைக் கூட பார்க்கவில்லை எனது மனது கொதிக்கிறது, மாவட்ட ஆட்சியர் என் மீதும் என் மகன்கள் மீதும் FIR செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார், மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார்,

மிகப்பெரிய கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளேன் என சற்று பொறுங்கள் என்று அருகில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரின்  காலில் விழுந்து கதறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது