1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Complaint who spread rumor about Vijayakanth

விஜயகாந்த் உடல்நிலை பற்றி வதந்தி - அலுவலகத்தில் புகார்!

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார். 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் வீடு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது விஜயகாந்து உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது சர்க்கரை அளவு சரியான அளவில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 
 
விஜயகாந்த் அவர்கள் ரீசார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பப்படுவதாக டிஜிபி அலுவலகத்தில் பார்த்தசாரதி புகார் அளித்துள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்று 5 மாவட்டங்களில் கனமழை!