சரவணா ஸ்டோர்ஸில் அநியாய விலைக்கு பிஸ்கட் விற்பனை – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை அவமரியாதை !

Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (12:35 IST)
சென்னை பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் அதிக விலைக்கு பிஸ்கட் விற்பனை செய்யப்படுவதை தட்டிக்கேட்ட வாடிக்கையாளரை பவுன்ஸர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. அதில் பாடி பாலத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கிளையும் ஒன்று. இதற்கு பொருட்கள் வாங்க சென்ற உமர் பரூக் என்ற இளைஞர் பிஸ்கட் விலை அநியாயமாக விற்கப்படுவது பற்றி கேட்டுள்ளார். ஆனால் பதிலளிக்காத நிர்வாகம் அவரை பவுன்ஸர்களை வைத்து வெளியில் இழுத்துச் சென்றுள்ளனர். அவரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.

இது சம்மந்தமாக வெளியான வீடியோ கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து கொரட்டூர் காவல்நிலையத்தில் இது சம்மந்தமாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் போலிஸார் இந்த புகார் மேல் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :