சரவணா ஸ்டோர்ஸ் ’நம்ம அண்ணாச்சி ’ நடிக்கும் புதிய படம் :வைரல் தகவல்

saravana store
Last Updated: ஞாயிறு, 16 ஜூன் 2019 (14:47 IST)
தமிழகத்தில் உள்ள பிரபலகடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளைப் பரப்பி பிரமாண்டமாகக் காட்சி தருகின்றது. அதன் விளம்பரங்கள் தான் இன்று எல்லா சேனல்களிலும் வரிசைகட்டி வருகிறது. 
முக்கியமாக இதில் தோன்றும் சரவணா ஸ்டோஸ்-ன் ஓனர் சரவணன் பல சினிமா பிரபல நடிகைகளுடன் ஆடுவதும், பாடுவடும் என மக்களைக் கவரும் அத்தனை அம்சங்களும் அதில் இருந்ததால் அவர் நடித்த விளம்பரங்கள் நன்றாக ரீச் ஆகி, செம வைரல் ஆனது.
 
இந்நிலையில் சரவணன் அண்ணாச்சி தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. முக்கியமாக அவர் நடிக்கும் படம் பல கோடி பட்ஜெட்களில் தயாரிக்கப்படுமென்று தெரிகிறது. இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
 
தான் நடிக்கும் படம் சமுதாயக் கருத்துள்ள மக்களைக் கவரும் விதத்தில் அமையும்படி இருக்க வேண்டும் என அன்பான அண்ணாச்சி உத்தரவிட்டுள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :