புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2019 (13:58 IST)

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா??

கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், அவரது கடை விளம்பரங்களில் அவரே நடித்து பிரபலமாகியவர். அவரது விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவரது விளம்பரங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி தான் அத்திரைப்படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி முன்னதாக உல்லாசம், மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பட்ஜெட் 30 கோடிக்கு மேல் கூறப்படுகிறதாம்.