வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (13:30 IST)

சரவணா ஸ்டோர்ஸில் வரி ஏய்ப்பு – ஜி எஸ் டி அதிகாரிகள் சோதனை !

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் ஜி எஸ் டி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் சரவணா ஸ்டோர்ஸும் ஒன்று. சென்னையில், பாடி, தாம்பரம், வேளச்சேரி, தி.நகர் என பல இடங்களிலும் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அடிக்கடி இந்த கடைகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று தி நகர் மற்றும் பாடியில் உள்ள இதன் கிளைகளில் ஜி எஸ் டி அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் போல வந்து சோதனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. காலை முதல் தற்போது வரை இந்த சோதனைகள் நடந்து வருகின்றது.