வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (15:13 IST)

தேர்தலில் போட்டியா? பாஜகவுக்கு ஆதரவு மட்டுமா? ஓபிஎஸ் நாளை முடிவு

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பாஜக வேட்பாலர்கள் பட்டியல் இரண்டாவது கட்டமாக வெளியிடப்பட்டது. இந்த இந்த நிலையில் பிரதமர் மோடி  நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்,
 
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தினகரனோடு அரசியலில் ஈடுபட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறார். சமீபத்தில் சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
 
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள தினகரனின் அமமுகவுக்கு நேற்று 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதா? அல்லது பாஜகவுக்கு ஆதரவு மட்டும் அளிப்பதா? என்பது குறித்து நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் ஓபிஎஸ்.
 
தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் 3 தொகுதிகள், தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக கூறிய நிலையில் தனிச்சின்னத்தின் போட்டியிடவே ஓபிஎஸ் விருப்புவதாக தகவல் வெளியாகிறது.