புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (09:10 IST)

தேர்தலில் போட்டியில்லை என்றாலும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு: திருமாவளவன் முடிவு..!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா என்பவருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளும் தனி தொகுதிகள் என்பதால் அவர் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இருப்பினும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத போதிலும் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வியூக பொறுப்பாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். 
 
மக்களவைப் பொதுத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் பகுதியில் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை தேர்தல் வியூக பொறுப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ்  அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக முறைப்படி திருமாவளவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆதவ் அர்ஜுனா தனித் தொகுதியில் போட்டியிட முடியாது என்பதால் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
Edited by Siva