வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (09:00 IST)

சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவ் மகள்.. மக்களவை தேர்தலில் போட்டியா?

தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது  பீகார் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் நாலு பிரசாத் யாதவ் மகள் பிசா பாரதி ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் 
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் நான்காவது மகள் ரோகிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கும் நிலையில் அவர் இந்தியா வரயிருப்பதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது 
 
சிங்கப்பூரில் டாக்டராக இருக்கும் 44 வயது ரோகிணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு சிறுநீரக தானம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் பீகாரில் உள்ள சரண் என்ற தொகுதியில் ரோகினி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது ரோகிணி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது. பீகாரில் இந்தியா கூட்டணி ஓரளவு வலுவாக இருக்கும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் மகள் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva