1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Come Storm be ready to be ready

வருது புயல் - தயாராக இருக்க உத்தரவு

Come Storm
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை எச்சரிக்கும் வகையில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி புயல் வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாகை, காரைக்காலில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.



தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.   
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 80% இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது கார்றின் வேகம் பெரும்பாலும் 150 கிமீ இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் மீட்புப் பயிற்சி பெற்ற காவல்துறையினர் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 
மீட்புப்பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
பெண்களை கற்பழித்த கணவன் : வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி ! பகீர் சம்பவம்