சுட்டெரிக்கும் வெயில்: சென்னையில் களைகட்டும் பீர் விற்பனை

Beer
Last Modified வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:42 IST)
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்  கொண்டிருக்கும் நிலையில், பீர் விற்பனை களைக்கட்டியுள்ளது.
 
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில், மக்களை வாட்டிவதைத்துக்  கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.  வெயிலின் தாக்கத்தை தனிக்க குடிமக்கள் அனைவரும் டாஸ்மாக்கில்  தஞ்சம் அடைவதால், பீர் விற்பனை அமோகமாக உள்ளது.
 
சம்மர் சீசனை முன்னிட்டு பீர் குடிப்பவர்கள் வழக்கத்தைவிட அதிகமானதால் வழக்கத்தைவிட நாள் ஒன்றிற்கு ரூ.10 கோடிக்கு பீர் விற்பனை அதிகமாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :