ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (11:18 IST)

தகாத முறையில் நடந்து கொண்டாரா சல்மான்கான்? போலீஸில் புகார்

நபர் ஒருவர் சல்மான் கான் தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தனது செல்போனை பிடிங்கிக்கொண்டதாகவும் அவர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
 
எப்பொழுதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் தான் நடிகர் சல்மான் கான். அவரை சுற்றி எந்நேரமும் எதவாது ஒரு சர்ச்சை, பிரச்சனை என்பது இருந்துகொண்டே இருக்கும்.
 
அந்த வகையில் சல்மான் கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நபர் ஒருவர் காரிலிருந்தபடி சல்மான் கானை வீடியோ எடுத்துள்ளார். இதனைப் பார்த்த சல்மான் கான் அந்த நபரின் செல்போனை பிடிங்கிக் கொண்டதாக தெரிகிறது.
 
இதனையடுத்து அந்த நபர் காவல் நிலையத்திற்கு சென்று சல்மான் கான் தன்னை அநாகரீகமான முறையில் நடத்தியதாகவும், தனது செல்போனை பிடிங்கிக்கொண்டதாகவும் புகார் அளித்தார். சல்மான் கான் தரப்பில் அந்த நபர் தனி நபர் சுதந்திரத்திற்கு இடைஞ்சல் விளைவிக்குமாறு நடந்துகொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. கடைசியில் போலீஸார் அந்த நபரை எச்சரித்து போனை அவரிடம் ஒப்படைத்தனர்.