வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 மே 2022 (10:41 IST)

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: விசாரணைக்கு உத்தரவு!

sanskritt
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: விசாரணைக்கு உத்தரவு!
மதுரை மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிரத மொழியில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சபாத் உறுதிமொழியை ஏற்றதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த சர்ச்சை காரணமாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமஸ்கிருதம் உறுதிமொழி தொடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த விளக்கத்தை கல்லூரி முதல்வர் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது