1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (18:09 IST)

மாங்காய் சாப்பிட்ட ஆசைப்பட்ட 11 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்!

magnisium
மாங்காய் சாப்பிட்ட ஆசைப்பட்ட 11 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்!
கிருஷ்ணகிரியில் மாங்காய் தின்ன ஆசைப்பட்டு, 11 மாணவர்கள் திடீரென மயக்கமடைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கிருஷ்ணகிரியில் உள்ள மோரனஹள்ளி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் ஆய்வகத்தில் உப்பு என அனைத்தையும் மெக்னீசியம் பாஸ்பேட்டை தொட்டு சாப்பிட்டதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து 11 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்