1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. College holiday on may 14th

இன்று அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை!

உயர்கல்வித்துறை
தமிழகத்தில் இன்று அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று ( மே 14 ஆம் தேதி) விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் (TANCET) தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 
About Writer
Sugapriya Prakash