செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:45 IST)

வலுக்கும் ஹிஜாப் சர்ச்சை; மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவது தொடர்பான சர்ச்சை வலுத்த நிலையில் 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தின.

இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பலரும் காவி துண்டு அணிந்து வந்து போராட்டம் நடத்துவது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவ்வாறு இருதரப்பிலும் போராட்டங்கள் கிளம்பும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.