செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:03 IST)

ரயிலில் திருடுவதை பார்ட் டைம் தொழிலாக பார்த்த கல்லூரி மாணவி: அதிர்ச்சி தகவல்

பொதுவாக கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பார்ட் டைமாக ஏதாவது ஒரு வேலை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் காலை முதல் மாலை வரை கல்லூரியிலும் மாலைக்கு மேல் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது 
 
சென்னை மின்சார ரயிலில் அடிக்கடி திருடு போவதாக போலீசாருக்கு அதிக புகார்கள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக பெண்கள் கம்பார்ட்மெண்டில் நகைகள் செல்போன்கள் பர்ஸ்கள் ஆகியவை திருடு போவதாக புகார்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் பெண் போலீசார் மாறுவேடத்தில் தினமும் ரயிலில் சென்று கண்காணித்து வந்தனர்.
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு இளம்பெண் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண் ஒரு பர்ஸை திருடும்போது கையும் களவுமாக பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர் ஒரு கல்லூரி மாணவி என்றும் மாலை வரை கல்லூரியில் படித்துவிட்டு அதன் பின்னர் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு பொருட்களை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து வருகின்றனர் 
 
கல்லூரி மாணவி ஒருவர் பார்ட் டைம்தொழிலாக திருட்டை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது