திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (09:30 IST)

ஜவுளிக்கடையில் 8 ஜீன்ஸ்களை நூதனமாக திருடிய இளம்பெண்

ஜவுளிக் கடையில் துணி வாங்குவதற்காக ஒரு கூட்டம் வருகிறது என்றால் துணியை திருடுவதற்காக ஒரு கூட்டமும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும். இதனை கண்காணிக்க எத்தனை சிசிடிவி கேமரா இருந்தபோதிலும் இதற்கென பயிற்சி பெற்றவர்கள் திறமையாக திருடி செல்பவர்களும் உண்டு 
 
இந்த நிலையில் வெனிசூலா நாட்டில் ஒரு இளம்பெண் ஜவுளிக் கடையில் நூதன முறையில் 8 ஜீன்ஸ் பேண்ட் திருடியதை அந்த கடை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண் ஜீன்ஸ் பேண்ட் வாங்குவதைப் போல் நடித்து ஒரு சில ஜீன்ஸ் பேண்ட்களை எடுத்துக் கொண்டு ட்ரையல் அறைக்கு சென்றுள்ளார். டிரையல் அறையில் ஒன்றன் மேல் ஒன்றாக 8 ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு, அதன்பின் ஒருசில ஜீன்ஸ்களை மட்டும் கையில் எடுத்து பில் போட்டுள்ளார்
 
அவருடைய நடவடிக்கையைப் பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவரை சோதனை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து அவரை மீண்டும் ட்ரையல் அறைக்கு பெண் ஊழியர்கள் அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்தபோது அவர் ஒன்றின் மேல் ஒன்றாக எட்டு ஜீன்ஸ்களை பேண்ட் அணிந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் 
 
போலீசார் அவர் மீது திருட்டுக் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இது போன்று திருடுவதற்காகவே பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரு கூட்டமே இருப்பதாகவும் அவர்களிடமே விழிப்புணர்வுடனும் கடைக்காரர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது