1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (17:59 IST)

உறவினர் வீடுகளில் மட்டும் திருடிய ’காதல் ஜோடி’ ! இதென்ன புது டெக்னிக் ...

சென்னையைச் சேர்ந்த காதல் ஜோடி, தங்களது உறவினர்கள் வீடுகளில் மட்டுமே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரை அடுத்த பகுதியில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவர் சில தினங்களுக்கு முன், தனது வீட்டை பூட்டி விட்டி வெளியே சென்றுள்ளார். மீண்டு இரவில் வந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இதுகுறித்து அவர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
 
அதில், ஒரு ஆணும், பெண்ணும், தங்களின் உறவினர்களின்  வீடுகளுக்குச் சென்று கதவைக் கள்ளச் சாவு போட்டு திறந்து கொள்ளயடித்துச் சென்றது தெரியவந்தது.
 
பின்னர், போலிஸார் அந்தக் கேமராவில் பதிவாகி இருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது காதலி நித்தியா ஆகியோரைக் கைது செய்தனர்.
 
இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, உறவினர்களில் வசதியானவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் சாவி வைக்கும் இடத்தை அறிந்து, அதைச் சோப்பில் பதிந்து, கள்ளச் சாவி போட்டு, திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.