1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore poccso cour sentenced first hang sentence

கோவை போக்ஸோ நீதிமன்றம் அளித்த முதல் தூக்குத் தண்டனை ! -

போக்ஸோ
கோவையில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த சந்தோஷ்குமார் என்ற நபருக்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார். இது சம்மந்தமாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேடிய போலிஸார் மறுநாள் காலை சிறுமியை சடலமாக மீட்டனர். விசாரணையில் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வழக்கில் 10 தனிப்படைகள் நடத்திய தீவிர விசாரணையில் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரைக் கைது செய்தனர். இந்த கொலை சம்மந்தமான வழக்கு, கோவை போக்ஸோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  என்ற அமைப்பு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது.

தீர்ப்பில் ’இந்திய தண்டனை சட்’இ பி கோ 302 பிரிவு படி சாகும் வரை தூக்கு தண்டனை, போஸ்கோ 5L, 5M பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம், இந்திய தண்டனை சட்டம் 201ன்படி 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம்’ என வாசிக்கப்பட்டது. போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட முதல் தூக்குத் தண்டனையாக இது அமைந்தது.
அடுத்த கட்டுரையில்
வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய கும்பல்! புதுக்கோட்டையில் பரபரப்பு