புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (10:17 IST)

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் – போக்ஸோ சட்டத்தில் கைது !

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் படித்து வருகிறார். பள்ளிக்குத் தெரியாமல் அவர் இன்ஸ்டாகிராமே கதியாகக் கிடந்துள்ளாட். அதில் மாணவி பதிவிடும் புகைப்படங்களுக்கு மதுரையைச் சேர்ந்த அல் ஹசன் என்ற இளைஞர் கமெண்ட் செய்து வர்ணித்து அவரிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.

இளைஞரை நம்பிய மாணவி அவரிடம் செல்போனில் பேச ஆரம்பிக்க தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அவர் ஹசனுக்கு அனுபியுள்ளார். இதையடுத்து இருவரும் நாமக்கல்லுக்கு சென்று விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மாணவியின் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மாணவி மயக்கமடைய, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவி நடந்ததைக் கூற இளைஞர் ஹசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.