தொடர்புடைய செய்திகள்
- திருமணமான நான்கே மாதங்களில் மனைவி, கணவர் அடுத்தடுத்து தற்கொலை: பெரும் பரபரப்பு
- மூன்று நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை !
- ரூ.90 லட்சம் பணத்தை வங்கியில் எடுக்க முடியாத நிலை: மாரடைப்பால் வாடிக்கையாளர் மரணம்
- காதல் திருமணம்... மகளை எரித்துக் கொன்ற கொடூர பெற்றோர் !
- காந்தி எப்படித் தற்கொலை செய்துகொண்டார் ? – சர்ச்சையைக் கிளப்பிய பள்ளி வினாத்தாள் கேள்வி !
ஒரு மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட புது மனைவி – பின்னணி என்ன ?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காதல் திருமணம் முடிந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி நகர் அருகே பாரதியார் நகரை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மற்றும் சத்யவாணி தம்பதிகள். இவர்கள் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில்தான் திருமணம் கொண்டுள்ளனர். காதலின் போது ஒருவரை ஒருவர் புரிந்து மகிழ்ச்சியாக இருங இருந்த இவர்கள் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே இவர்களுக்கு இடையில் சண்டை வர ஆரம்பித்துள்ளது.
ஒருமாதத்திற்குள்ளாகவே அடிக்கடி சண்டை வரவே இருவரும் மன விரக்தியில் இருந்துள்ளனர். வழக்கம்போல இருவருக்கும் இடையில் சண்டை மூண்டுள்ளது. இதையடுத்து விரக்தியடைந்த சத்யவாணி கணவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து போலிஸார் சத்யவாணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கல்யாணம் ஆகி 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரின் கணவர் மற்றும் உறவினர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
