ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (16:39 IST)

காதல் திருமணம்... மகளை எரித்துக் கொன்ற கொடூர பெற்றோர் !

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள  குப்பம் ரெட்ல என்ற கிராமத்தில் வேறு சாதி இளைஞனைத் திருமணம் செய்த மகளை பெற்றோரே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள  குப்பம் ரெட்ல என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தனா  (18). இவர் அங்குள்ள ஒரு கல்லூரில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், சந்தனா, பொன்முடி என்ற பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார். நந்தகுமார் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சந்தனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். 
 
இதுகுறித்து தெரிந்த சந்தனாவின் பெற்றோர், நந்தகுமாரின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர், வீட்டில் சடங்கு செய்ய வேண்டுமென மகளை அழைத்துச் சென்றனர்.
 
இதனையடுத்து, சந்தனா, தன் வீட்டுக்கு திரும்ப வராததால் ஏமாற்றம் அடைந்த நந்தகுமார், மனைவியின் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அவள் தற்கொலை செய்து கொண்டார் என கூறியதைக் கேட்டுய் அதிர்ச்சி அடைந்தார் நந்தகுமார்.
 
அதன்பின்னர், குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, சந்தனாவின் எரிக்கப்பட்ட தடயங்கள் கிடைத்தது, ஆனால் அங்கு ஒருதுளி சாம்பலும் இல்லை. அதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
தாழ்ந்த சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட மகளைப் பெற்றோரே ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.