திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (08:44 IST)

5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தைப்புலி சிக்கியது: காட்டில் விட வனத்துறை முடிவு!

5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தைப்புலி சிக்கியது: காட்டில் விட வனத்துறை முடிவு!
5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தைப்புலி சிக்கியது: காட்டில் விட வனத்துறை முடிவு!
கோவையில் கடந்த 5 நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தைப்புலி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கோவையில் கடந்த 5 நாட்களாக குடோன் ஒன்றில் நுழைந்த சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர்
 
5 நாட்களாக வனத்துறையினர் வைத்த கூண்டில் பிடிபடாமல் இருந்த சிறுத்தை புலி நேற்று கூண்டில் வைக்கப்பட்ட உணவை எடுக்க வந்தபோது சிக்கியது
 
இதனையடுத்து அந்த சிறுத்தைப்புலிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும் முழு உடல் தகுதியுடன் சிறுத்தைப்புலி இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் அந்த சிறுத்தை புலியை அடர்ந்த காட்டில் கொண்டு சென்று விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
ஐந்து நாட்களாக வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தைபுலி சிக்கியதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது