1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore car blast case, five in jail

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: 5 பேர்களுக்கு 14 நாட்கள் சிறை!

jail
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில்  அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் 
 
கோவை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்களும் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பி வரும் நிலையில் முதலமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்கள் இது குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
2 நாள் கழிச்சு இல்ல.. இன்றைக்கே அபராதம்தான்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!