1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (08:17 IST)

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

traffic
தீபாவளி முடிந்து மக்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்து வருவதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தீபாவளி பண்டிகைக்காக கடந்த சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது செவ்வாய்க்கிழமையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து நேற்று இரவு தென் மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும் பொதுமக்கள் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது
 
குறிப்பாக பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து பிரச்சினையை போக்குவரத்து காவலர்கள் சரி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva