1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai write a letter to amitshah

கோவை கார் வெடிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை!

annamalai
கோவை கார் வெடிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை!
கோவை கார் வெடிகுண்டு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் வெடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவம் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து கூறிய போது கோவை கார் வெடி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ மூடி மறைக்கின்றனர் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்
 
மேலும் இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றும் உளவுத்துறையை மாற்றுவதும் மாற்றாததும் முதல்வர் விருப்பம் என்றாலும் உளவுத்துறை தோல்வி என்பதை நான் உறுதியாக சொல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கோவை வெடிகுண்டு சம்பவத்தில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும்: சிபி ராதாகிருஷ்ணன்