3 நாட்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மௌனம் ஏன்? -கோவை வெடிசம்பவம் குறித்து வானதி சீனிவாசன்
கோவையில் கார் வெடிகுண்டு வெடித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்
கோவையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாஜக வினர் மற்றும் அதிமுகவினர் அடுத்தடுத்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களே நேரடியாக சென்று விசாரணை நடத்தினார் என்பது இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கோவை வெடிகுண்டு சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வியை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் எழுப்பியுள்ளார். கோவை கார் வெடிகுண்டு வழக்கில் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Siva