இணையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி சேலஞ்ச்

internet
Last Modified புதன், 15 மே 2019 (19:33 IST)
நெட்டிசன்களிடையே ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒரு சேலஞ்ச் பிரபலமாவது உண்டு.  “ப்ளூவேல்” போன்ற ஆபத்தான விளையாட்டுகளின் மூலம் தொடங்கிய இந்த சேலஞ்ச் ட்ரெண்ட் மற்ற சமூக வலைதளங்களிலும் பரவியது. 
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் குளிர்ந்த தண்ணீரை மேலே கொட்டிக்கொண்டு வீடியோ செய்வது, கி கி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி ஆடுவது என நெட்டிசன்கள் செய்யும் சில சேலஞ்கள் நகைசுவையாகவும் அமைந்து விடுவது உண்டு.
 
தற்போது அந்த வகையில் கரப்பான் பூச்சியை உடல் மேல் ஓடவிட்டு அதை வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடும் “காக்ரோச் சேலஞ்ச்” சேலஞ்ச் வைரலாகி வருகிறது. 
 
பர்மாவை சேர்ந்த அலெக்ஸ் அங் என்பவர் இதை முதன்முதலில் ஆரம்பித்து வைக்க தற்போது பலரும் இதை சவாலாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :