வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:52 IST)

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்... வைரலாகும் வீடியோ

சென்னை அம்பத்தூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சாலை ஓரமாக வாகனத்தில் இருந்துகொண்டு வருகிற போகிற வானக ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குகிற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சாலை ஓரமாக நின்று கொண்டு வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்கிறார். செக்போஸ்டுக்கு 50 ரூபாய் கட்டிட்டு போங்க என்று சுற்றிலும் வாகன ஓட்டிகள் நிற்க அவர்களை பிணைக்கைதிகள் மாதிரி நிற்க  வைத்துக்கொண்டு லஞ்சம் கேட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென கோடிக்கை வலுத்து வருகின்றன.