வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (13:48 IST)

முடிவெட்ட 30 ஆயிரமா... அசந்துபோன கஸ்டமர்..

தெருக்கடையில் முடிவெட்டிய வெளிநட்டு வாலிபர் கடைக்காரருக்கு 30 ஆயிரம் கொடுத்து சென்றுள்ளார்.
 
பொதுவாகவே வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளிடம் நம் வியாபாரிகள் நார்மலாக விற்கும் காசை விட அதிக காசிற்கே விற்பர். இது கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் அதுவே உண்மை. ஹோட்டல் ஆரம்பித்து பிளாட்பாரக்கடை பர்ச்சேஸ் வரை வெளிநாட்டவரை பார்த்தாலே எக்ஸ்ட்ரா காசிற்கு தான் வியாபாரம். ஏனென்றால் அவர்களுக்கு மொழி தெரியாது. அதை பயன்படுத்தி வியபாரிகள் பொருட்களை அதிக விலைக்கு விற்பர்.
 
இந்நிலையில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அகமதாபாத்தில் தெரு ஓரக்கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார். அவர் நினைத்தது போலவே அந்த கடைகாரர் அவருக்கு சூப்பராக முடி வெட்டி இருக்கிறார். பின்னர் முடி வெட்டியதற்கான தொகை எவ்வளவு என கேட்டுள்ளார். 20 ரூபாய் தாருங்கள் என அந்த கடைகாரர் கூறியிருக்கிறார்.
கடைக்காரரின் நேர்மையை பார்த்து அசந்துபோன  வாலிபர் அவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கொடுத்து குடும்ப செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த திடீர் சர்ப்ரைசால் அந்த கடைக்காரர் செய்வதறியாமல் சந்தோஷத்தில் திளைத்தார்.