இடைத்தேர்தல் வீக்கா இருக்கு!.. உளவுத்துறை ரீப்போர்ட்டால் ஷாக்கான விஜய்!...
அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக இணைந்ததால் அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருக்கிறது. அதில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள் தற்போது தவெக சார்பில் களமிறங்கியிருக்கிறார்கள். எனவே பொதுமக்களின் அதிருப்தியை தாண்டி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. மேலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே செல்வாக்கோடு ஆட்சி நடத்த முடியும் இல்லையெனில் மக்கள் செல்வாக்கை தவெக இழந்துவிட்டது என்கிற இமேஜ் வந்துவிடும்.
குறிப்பாக, திமுக இதை கையிலெடுத்து விமர்சிக்க துவங்கிவிடும். இடைத்தேர்தலில் தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு திமுகவில் கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் அந்த தொகுதிகளில் பணி செய்து வருகிறார்கள். இதனால், பட்டியலனினத்தவர், சிறுபான்மையினர் வாக்குகள் பிரியும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதோடு அந்த தொகுதியில் அதிமுகவிற்கு 40 சதவீத வாக்கு வங்கி இருப்பதால் அந்த வாக்குகளையும் பெற வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இடைத்தேர்தல் தவெகவுக்கு பலவீனமாக இருப்பதாக உளவுத்துறை கொடுக்க ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் அதிர்ச்சியடைந்துள்ளாராம். அதனால்தான், தாராபுரத்தில், மதுராந்தகம் தொகுதிகளில் தலா 2 நாட்கள் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள்.