விரைவில் தவெகவில் இணையும் பாமக?.. விஜய் போடும் மாஸ்டர் பிளான்!..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, ஆட்சியமைக்க மேலும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளை தவெக அணுகியது.
அதேநேரம், அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த பாமகவிடம் தவெக ஆதரவு கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம், முதல்வரான பின் அன்புமணி ராமதாஸை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்தார். ஆனாலும், தவெக அரசின் செயல்பாடுகளை அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில்தான், விஜய்க்கு நெருக்கமான ஒருவர் சமீபத்தில் அன்புமணியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறாராம். சௌமியாவை அமைச்சராக வேண்டும் எனவும் முதல்வர் நினைக்கிறார்.. எனவே நீங்கள் தவெகவுக்கு எதிரான மனநிலையை விட்டுவிட்டு இடைத்தேர்தலுக்கு பின் கூட்டணிக்கு வந்து விடுங்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
ஒருபக்கம் விசிகவும், கம்யூனிஸ்ட்டுகளும் தவெகவுக்கு எதிராக பேசி வரும் நிலையில் அவர்களை கழட்டிவிட்டு பாமகவை உள்ளே கொண்டு வந்து விடலாம் எனவும் முதல்வர் ஜோசப் விஜய் நினைப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில், 2026 சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் இல்லாமலேயே ஆதிதிராவிடர்களின் வாக்குகளை தவெக பெற்றிருக்கிறது.
தற்போது வன்னியர் வாக்குகளை பெற பாமக தனது கூட்டணியில் இருக்கவேண்டும் என விஜய் நினைக்கிறாராம். அனேகமாக இடைத்தேர்தல் முடிவுக்கு பின் தவெகவில் சில கட்சிகள் விலகும்.. சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.