1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay planning to do roadh show compaign

தாராபுரம் பகுதியில் ரோட் ஷோ செய்ய விஜய் திட்டம்!.. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!..

vijay
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

2026 சட்டசமன்ற தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

எனவே அங்கு அந்த இரண்டு வேட்பாளருக்கும் தற்போது அதே தொகுதியில் தஎக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே, விஜய் அங்கு சென்று பிரச்சாரம் செய்தால் மட்டுமே அவர்கள் இருவரும் வெற்றி பெறும் நிலை இருக்கிறது..

இந்நிலையில்தன், தாராபுரத்தில் இரண்டு நாட்களும் மதுராந்தகத்தில் இரண்டு நாட்களும் பிரச்சாரம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டிருக்கிறார். வருகிற 4ம் தேதி முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் ரோட் ஷோ வாகன பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். ருத்ராவதி தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர், தாசர் பட்டி வரை அவர் வாக்கு சேகரிப்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
செல்போன், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல்!.. வேகமெடுக்கும் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு..