1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police raid in gem veeramani places today

ஜெம் வீரமணி தொடர்பான இடங்களில் அதிரடி ரெய்ட்!.. களத்தில் இறங்கிய காவல்துறை...

gem granites veeramani
ஜெம் கிராணைட்ஸ் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீரமணி கடந்த பல வருடங்களாகவே பல சிறுமிகளையும் சீரழித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக வீரமணியை மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஒருமுறை கேட்ட பணத்தை வீரமணி கொடுக்காததால் காவல்நிலையத்தில் அவர்களே புகாரளித்ததும் தெரியவந்த்ருக்கிறது. தற்போது  வீரமணி மற்றும் சாந்தி, கணேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் வீரமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கைதிலிருந்து தப்பிக்க சுமார் ரூ.70 கோடி அளவுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வீரமணி லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார். எனவே, இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது..

இந்நிலையில்,  ர்மணி தொடர்பு இடங்களில் இன்று மதிய முதல் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகம், வீடு உள்லிட்ட வீரமணி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும், 5க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நம்ம மதுராந்தகம், நம்ம தாராபுரம் உள்பட 34 ஆயிரம் வாட்ஸ் அப் குரூப்புகள்.. தவெக அதிரடி பிரச்சாரம்...