இடைத்தேர்தலில் 4 நாட்கள் பிரச்சாரம்!.. இறங்கி அடிக்கப்போகும் விஜய்!...
சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகிவிட்டார். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அதேபோல் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏக்களில் ஆறு பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இதையடுத்து தவெக குதிரை பேரில் ஈடுபட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார்..
ஒருபக்கம், காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற அக்டோபர் 6ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தவெகவில் இணைந்துள்ள இரண்டு வேட்பாளர்களும் மீண்டும் அதே தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில்தான், முதலமைச்சர் விஜய் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். தொகுதிக்கு தலா இரண்டு நாட்கள் என இரண்டு கட்டங்களாக அவர் பரப்புரை செய்வார் என சொல்லப்படுகிறது.|