1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor nani said vijay as a cm is doing good

சட்டசபையில் விஜய் சார் கலக்குறார்!.. நடிகர் நானி நெகிழ்ச்சி!...

nani vijay
தெலுங்கில் உள்ள முக்கிய நடிகர்களில் நானியும் ஒருவர். அவர் நடித்துள்ள பாரடைஸ் திரைப்படம் வரும் 24ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நானியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ‘விஜய் சாரை முதல்வர் விஜயக மாறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலை மட்டும் பார்த்து மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. பல ஆண்டுகளாக அவர் உருவாக்கிய நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம்.. சட்டப்பேரவையில் அவர் பேசிய சில வீடியோக்களை பார்த்தேன்.. சிறப்பாக இருக்கிறது.. அவர் கலக்கிக்கொண்டிருக்கிறார்..

எனக்கு தமிழ் சினிமா பைபிள் போன்றது..  கமல் சார்,, மணிரத்தினம் சார்.. பாரதிராஜா சார்.. பாக்யராஜ் சார் போன்ற ஜாம்பவான்களின் படைப்புகளை பார்த்து நான் சினிமாவை எப்படி அணுக வேண்டும் என கற்றுக் கொண்டேன். சென்னைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் எனது சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பான் மசாலா விளம்பரம்!.. ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை!..