பெண் குழந்தையை உயிரோடு புதைத்த தாய் - ராமேஸ்வரத்தில் கொடூரம்..
பெண் குழந்தை பிறந்தால் அதை கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடுவது என்பது பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் சில கிராமங்களிலும் ஒரு பழக்கமாக இருந்தது. ஆனால் அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கை காரணமாக அது பரவலாக குறைந்தது. இந்நிலையில்தான் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தாயே அதை குழி தோண்டி புதைத்த கொடூரம் ராமேஸ்வரத்தில் நடந்துள்ளது..
ராமேஸ்வரத்தை சேர்ந்த லோக நந்தினி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது பெண் குழந்தை பிறந்ததால் அதை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து குழி தோண்டி புதைத்து விட்டனர். லோக நந்தினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை எங்கே? என மருத்துவர்கள் விசாரிக்க, இறந்து பிறந்ததால் புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடலை தோண்டியெடுத்த போலீசார் பிரசவம் பார்த்த நாத்தனார் முனீஸ்வரி, தாய் லோக நந்தினி, கணவர் நாக பாண்டி, மாமனார் கிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.