1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin speech in collectors meeting

பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Stalin
பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
மேலும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 
அதேபோல் பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 
மேலும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க செயல்படுவார்கள் என்றும்  அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னை எலெக்ட்ரிக் ரயில்களில் ஏசி பெட்டி! – பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!