ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (15:43 IST)

இந்த கட்சிகளிடம் இருந்து விலகியிருங்கள்- முன்னாள் முதல்வர்

தேசிய  ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியின்  இண்டியா கூட்டணியில் இருந்து விலகியிருங்கள் என்று முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நமது நாட்டில்  நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி உபி., மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியின்  மூத்த தலைவர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார்.

அப்போது அவர், ஆளும் தேசிய  ஜன நாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியின்  இண்டியா கூட்டணியல் இருந்து விலகியிருங்கள். இந்த தூரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் பலத்தை அதிகரிக்க உழைக்ககலாம் என்று தெரிவித்துள்ளார்.