திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (11:35 IST)

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு   நலத்திட்ட உதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  இன்று தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்ணா அரங்கில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நாட்டில் தாமஸ்  ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் ஏன் உருவாககவில்லை என அப்போது கேட்டவர் அண்ணாம், அதனால் அவர் பெயரிலான இந்த  அரங்கில் விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிற விஞ்ஞானிகள் 9 பேருக்கும் அரசு  சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். உழைப்புக்கான அங்கீகாரமாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்…முதுநிலை பொறியியல் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 1,. சந்திரயான் 2, சந்திரயான் 3 ஆகிய திட்டங்களில் தமிழ்நாட்டு விஞ் ஞானிகளின் பங்களிப்பு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.