பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் தோல்வி பயத்தில், பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு பிரதமர் பொய் பரப்புரை மேற்கொள்கிறார் என்றும், 10 ஆண்டு சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கியுள்ளார் பிரதமர் மோடி என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் உண்மைகளை மறைத்து, மகளிர் இலவச பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார் என்று கூறிய முதல்வர் ஆட்சிக்கு வந்தத முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயண சுதந்திரத்தை தந்ததோடு பெண்களுக்கு பல வகையிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran