வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 மே 2024 (15:09 IST)

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Rajnath Sing
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார் என்றும் ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் சிறை சென்று விடுவார் என்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத்சிங் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
 
2024 தேர்தல் பிறகு மோடி பிரதமராக மாட்டார் என்று டெல்லி முதல்வர் கூறியது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறிய ராஜநாத் சிங் அவரே ஜாமினில்  தான் வெளியே வந்துள்ளார், ஜூன் 1ஆம் தேதி அவர் மீண்டும் சிறை செல்ல வேண்டும் என்பதை மறந்துவிட்டார் என்று கூறினார். 
 
மேலும் 2024 மட்டுமல்ல 2029 ஆம் ஆண்டிலும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்றும் மோடி பிரதமராக மாட்டார், யோகி முதல்வராக மாட்டார் என்று கெஜ்ரிவால் முட்டாள்தனமாக பேசியுள்ளார் என்றும் அவர் மட்டுமே இருப்பார் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் அவர் பேசிக் கொண்டிருப்பது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசியல் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் தான் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva