வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 மே 2024 (08:27 IST)

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது என்றும், ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்றும் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் 3 வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்றும், பிரதமர் யாரையும் பிளவு படுத்தவில்லை, எல்லோரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார் என்றும், பெரும்பான்மை, சிறுபான்மை என மக்களை பிரிக்காமல் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது என்றும் மத ரீதியாக பிரதமர் மோடி மக்களை பிளவு படுத்துகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
 
மேலும் மக்களை பிரித்தே வைத்திருந்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என்பது காங்கிரஸின் எண்ணம். இதை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.
 
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 வது முறையாக ஆட்சி அமைய போகிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்றும் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.
 
Edited by Siva