வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (11:14 IST)

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

Chidambaram
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டிய நிலையில் அதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது மதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்து முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார் 
 
இதற்கு பதில் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் சட்டப்படி ஒரு ஆண்டுக்கு ஒரு பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்றும் சட்டத்தை மீறி எவ்வாறு இரண்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார் 
 
பிரதமர் மோடி இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறுவது அபத்தமாக இருக்கிறாது என்றும் அவரது பேச்சை உலகமே உன்னிப்பாக கவனித்து வருவதால் அவரது பேச்சால் இந்தியாவுக்கு பெரும் அவப்பெயர் கிடைத்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Mahendran